பக்கம்:என்னுரை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விகடன் தலையங்கம் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி தேடும் நோக்கத்துடன் தினமும் விகடன் அலுவலகத்துக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். ஆனந்த விகடனின் ஸ்ர்க்குலேஷன் பலம், வாசகர்களிடையே அதற்குள்ள செல்வாக்கு இரண்டையும் பயன்படுத்தி காங்கிரஸின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும். அதுவே இந்த நாட்டுக்கு விகடன் செய்யும் சிறந்த பணியாக இருக்க முடியும் என்று அவர் கருதினார். அந்த நாட்களில், வீட்டை மறந்து, ஸ்டுடியோவை மறந்து, இரவு பகலாக ஆனந்த விகடனிலேயே ஆசிரியர் குழுவோடு அமர்ந்து அரசியல் வி ஷயங்களை அலசி ஆராய்ந்து விவாதிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய நாட்டுப் பற்றையும், பத்திரிகைத் தொழிலில் அவருக்குள்ள ஆர்வத்தையும், அந்தத் தொழிலை அவர் எந்த அளவு நேசிக்கிறார் என்பதையும் அவரோடு பழகிய காலத்தில் என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு நாள் அப்படித்தான், நாங்கள் எல்லோரும் அந்த வாரம் எழுத வேண்டிய தலையங்கம் பற்றிய சர்ச்சையில் மூழ்கியிருந்தோம். அன்றைய 'எடிடோரியல் டிஸ்கவுன் மிகத் தீவிரமாகவும், சூடாகவும் நடந்து கொண்டிருந்த நேரம். திடீரென்று பூஜை வேளையில் கரடி புகுந்த மாதிரி, எங்கள் சிந்தனைக்குத் தடைக்கல் போட்டதுபோல் டெலிபோன் மணி ஒலித்தது. வாசன் மிக மிக 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/14&oldid=759579" இலிருந்து மீள்விக்கப்பட்டது