பக்கம்:என்னுரை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுகிறது. இறந்துபோன அந்தக் குதிரை உயர்ந்த ஜாதிக் குதிரை. மைசூர் மகாராஜா வுக்குச் சொந்தமானது. மிகுந்த பிரயாசையின் பேரில் வரவழைக்கப்பட்ட குதிரை. அந்தக் குதிரை இறந்து போனதும் படப்பி டிப்பு சம்பந்தப்பட்டவர்கள் பதறிப்போய் வாசனுக்கு டெலிபோனில் தகவல் சொல்லியிருக்கிறார்கள். திரு. வாசன் அவர்கள் அதையெல்லாம் சட்டென்று எங்களிடம் சொல்லி விடவில்லை. டிஸ்கவுன் எல்லாம் முடிந்து, நாங்கள் எல்லோரும் வேலை முடிந்த திருப்தியுடன் சாப்பிட்டு விட்டு வந்த பிறகுதான் சாவகாசமாகச் சொல்லி முடித்தார். 'நாமாக இருந்திருந்தால் அந்த நேரத்தில் எப்படிப் பதறிப் போயிருப்போம்? என நான் எண்ணிப் பார்த்தேன். வாசன் அடிக்கடி சொல்வதுண்டு. "பத்திரிகை விஷயமாய் உங்களோடு கலந்துரையாடுவதில் எனக்குள்ள மகிழ்ச்சிக்கும், இன்பத்துக்கும் ஈடு எதுவுமில்லை. சினிமாத் தொழிலில் நிறையப் பணம் வருகிறது. பத்திரிகைத் தொழிலில் அந்த அளவுக்குப் பணம் சம்பாதிக்க முடியாதுதான். ஆனால் உங்களைப் போன்ற அறிவு ஜீவிகளோடு உட்கார்ந்து தேசிய அளவில் அரசியல் விஷயங்களை அலசும்போது ஏற்படுகிற திருப்திக்கும், மகிழ்ச்சிக்கும் அது ஈடாகுமா? படத் தொழில் பேயிங் பிஸினஸ்! பத்திரிகைத் தொழில் பேயாத பிஸினஸ்! என்று சொல்லிவிட்டுச் சிரிப்பார். ኽ0

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/16&oldid=759581" இலிருந்து மீள்விக்கப்பட்டது