பக்கம்:என்னுரை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திரர் சதாசிவம் Ll] ராட்வே 144 - முகவரிக்கு நான் அடிக்கடி போவது வழக்கம். அங்கே தான் விகடன் அலுவலகம் இருந்தது. ஏதாவது ஜோக் எழுதிக் கொண்டு போய் நேரிலேயே கொடுத்து விட்டு வருவேன். டிராம் வண்டிகள் ஒடிக் கொண்டிருந்த காலம் அது. ரொம்ப துரத்தில் மண்ணடிக்கு அருகில் டிராம் வரும்போதே டிங்-டிங் என்று அதன் மணி ஓசை விகடன் அலுவலகம் வரை கேட்கும். அந்த ஒசை கேட்டதும் விகடன் அலுவலகத்தில் ஒர் இளைஞர் பரபரப்படைந்து விடுவார். டிராம் வருவதற்குள் சில வேலைகளை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு டிராமைப் பிடிக்க வேகமாக வாசலுக்கு விரைவார். அந்த இளைஞர் டிராம் வண்டியில் மோஷனில் ஏறும் காட்சியை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அவர் வேறு யாருமல்ல; பிற்காலத்தில் கல்கி அதிபர் திரு. டி. சதாசிவம் என்று பிரபலமாக அழைக்கப்பட்டவர் தான். திருமதி எம். எஸ். அவர்களைத் திருமணம் செய்து கொண்ட சுந்தரபுருஷர்தான். திரு.சதாசிவம் அவர்கள் விகடன் அலுவலகத்தை விட்டு விலகிய பின்னர் ஹநுமான் என்ற பெயரில் தொடங்கப்பட்ட பத்திரிகையில் சேர்ந்தார். பரதன் என்கிற ஆர்.பார்த்தசாரதி, ஹநுமான் பத்திரிகையின் 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/18&oldid=759583" இலிருந்து மீள்விக்கப்பட்டது