பக்கம்:என்னுரை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியராகவும் திரு. சதாசிவம் விளம்பர நிர்வாகியாகவும் இணைந்து அந்தப் பத்திரிகையைச் சில காலம் வெற்றிகரமாக நடத்தினார்கள். அந்தக் காலத்தில் (1936) டெலிபோனைச் சுழற்றியே விளம்பரங்களைப் பெற்றுவிடும் தனித்திறமை திரு சதாசிவத்துக்கு இருந்தது. கேசரி பிரிண்டிங் ஒர்க்ஸ் சுந்தரம் ஐயரும், பிரபல காங்கிரஸ்காரர் ரகுராஜபாரதியும் ஹநுமான் பத்திரிகையின் உரிமையாளர்கள். நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக திரு. பார்த்தசாரதியும் சதாசிவமும் அந்தப் பத்திரிகையை விட்டு விலக நேர்ந்தது. திரு.சதாசிவம் அவர்கள் எந்த முயற்சியில் ஈடுபட்டாலும், ஒரு தவமாக இருந்து, அதில் வெற்றி காணும் வரை ஒயமாட்டார். எந்தக் காரியத்தைச் செய்தாலும் அது துல்லியமாக இருக்க வேண்டும். எவ்விதத் தொய்வும் இன்றி நிறைவேற வேண்டும். நானறிந்தவரை Perfectionist என்ற சொல் திரு.சதாசிவம் அவர்களுக்குத்தான் முழுமையாகப் பொருந்தும். திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி சேவாசதனம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. கிண்டியில் இருந்த ஒரு ஸ்டுடியோவில் நாள்தோறும் ஷஅட்டிங் நடந்து கொண்டிருந்தது. பத்திரிகை தொடர்பாக திரு.சதாசிவம் அடிக்கடி அந்தப் 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/19&oldid=759584" இலிருந்து மீள்விக்கப்பட்டது