பக்கம்:என்னுரை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குப் போய் வருவார். அப்போது எம்.எஸ்.ஸூடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்து திருமணத்தில் முடிந்தது. திரு. சதாசிவம் கர்நாடக இசைப்பிரியர், சிறந்த ரசிகர். அவரே நன்றாகப் பாடுவார். ஒரு காலத்தில் தம்முடைய கம்பீரமான குரலில் தேசிய கிதங்களைப் பாடி கதராடைகள் விற்பனை செய்தவர். எனவே எம்.எஸ். இவரைக் கவர்ந்ததிலும், எம்.எஸ்.ஸை இவர் கவர்ந்ததிலும் வியப்பு ஏதுமில்லை. ஒரு சுபயோக சுபதினத்தில் சதாசிவம் சுபலட்சுமியின் திருமணம் திருநீர்மலைத் திருக்கோயிலில் மிக எளியமுறையில் நடைபெற்றது. இந்தத் திருமண தம்பதியரின் போட்டோ, அப்போது பம்பாயிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த இல்லஸ்ட்ரேடட் வீக்லியில் வெளியாயிற்று. நான் அந்தப் படத்தைக் கத்தரித்து என் நோட்டுப் புத்தகம் ஒன்றில் ஒட்டி வைத்திருந்தது இன்னும் என் நினைவில் உள்ளது. திருமணத்துக்குப் பின் திரு.சதாசிவம் தம்பதியர் கீழ்ப்பாக்கத்துக்குக் குடியேறியதும், அதன் பின்னர் அவர்கள் வாழ்க்கை படிப்படியாக உயர்ந்து உச்சத்தைத் தொட்டதும் தமிழகம் மட்டுமல்ல, தமிழ் கூறும் நல்லுலகமே அறிந்த உண்மை. திரு. சதாசிவம் விடுதலைப் போரில் கலந்து கொண்டு சிறைபுகுந்து தியாகங்கள் புரிந்தவர். அன்று முதல் இன்று வரை துய கதராடையே அணிந்து கொண்டிருப்பவர். 18.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/20&oldid=759585" இலிருந்து மீள்விக்கப்பட்டது