பக்கம்:என்னுரை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசியவாதி என்கிற முறையில் ராஜாஜி, மதுரை வைத்தியநாதய்யர், திருச்சி டி.எஸ். எஸ். ராஜன் போன்ற தலைவர்களுடனும் மாயவரம் சாமி அய்யங்கார், ஆர்.கே.சுப்பிரமணி பிள்ளை போன்ற காங்கிரஸ் பிரமுகர்களோடும் நட்போடு நெருங்கிப் பழகியவர். - 1940-ல் ஆசிரியர் கல்கி அவர்கள் காந்திஜியின் அனுமதியுடன் தனிப்பட்ட சத்தியாக்கிரகப் போரில் ஈடுபட்டு சிறைசெல்லத் திட்டமிட்டிருந்தார். அப்போது திரு.கல்கி ஆனந்த விகடனில் பொறுப்பாசிரியராக இருந்ததால் சத்தியாகிரகப்போரில் ஈடுபட விகடன் அதிபர் திரு.வாசனிடம் கடிதம் முலம் அனுமதி கேட்டிருந்தார். தன்னிடம் முன் அனுமதி பெறாமலேயே கல்கி சத்தியாக்கிரகப்போரில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தது வாசனுக்குப் பிடிக்கவில்லை. இதனால் அவர்களிருவருக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட, அதன் காரணமாக கல்கி கிருஷ்ணமூர்த்தி விகடனை விட்டு விலக நேர்ந்தது. திருமதி. எம்.எஸ். நடித்த சகுந்தலை படம் அப்போதுதான் ரிலீஸ் ஆகி இருந்தது. அந்த நாட்களில் கல்கி எழுதும் கலை விமரிசனங்கள் தமிழ் வாசகர்களுக்கு வேதவாக்கு. அதிலும் அவர் எழுதும் சினிமா விமரிசனத்தை மிகுந்த ஆவலோடு படிப்பார்கள். கல்கியின் பேனா ஒரு படத்தைப் பாராட்டி விட்டால் அந்தப் படம் வெற்றி விழாக்கள் கொண்டாடத் தவறியதில்லை. இந்த உண்மையை சதாசிவம் அவர்கள் நன்கு அறிந்திருந்தார். அது 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/21&oldid=759586" இலிருந்து மீள்விக்கப்பட்டது