பக்கம்:என்னுரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மட்டுமல்ல; கல்கி எழுத்தில் அவருக்கு ஒரு பிரமையே இருந்தது. சகுந்தலைக்கு கல்கி விமரிசனம் எழுதினால் சிறப்பாக இருக்குமே, அதனால் படத்துக்கு வெற்றியும் பெருமையும் கிட்டுமே என்று சதாசிவம் எண்ணினார். ஆனால், அது அத்தனை எளிதான காரியமாகத் தோன்றவில்லை. காரணம் கல்கி அப்போது மாயவரம் சிறையிலிருந்தார். மாயவரம் சாமி அய்யங்கார், ஆர்.கே.சுப்பிரமணியப்பிள்ளை போன்ற பிரமுகர்களெல்லாம் கல்கியின் சத்தியாக்கிரகம் மாயவரத்தில்தான் நடக்க வேண்டும் என்று விரும்பி அதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். முன்று மாதம் சிறைத்தண்டனை பெற்ற கல்கி மாயவரம் சப்ஜெயிலில் காவல் வைக்கப்பட்டார். சிறைக்குள்ளிருந்த கல்கி அவர்களைத் தம்முடைய செல்வாக்கினால் வெளியே அழைத்துச் சென்று, தஞ்சாவூரில் ஒடிக் கொண்டிருந்த சகுந்தலை படத்தை பார்க்க வைத்ததுடன், அன்றிரவே கல்கியிடம் ஒரு விமர்சனத்தையும் எழுதி வாங்கிக் கொண்டு, அவரை பத்திரமாக மறுபடியும் ஜெயிலில் கொண்டு போய்ச் சேர்த்தும் விட்டார் சதாசிவம்! அந்த விமரிசனம் ஹறிந்து பத்திரிகை உட்பட பல பத்திரிகைகளில் வெளியாயிற்று. திரு.சதாசிவம் அவர்களை ஏற்கனவே கல்கி நன்கு அறிந்திருந்த போதிலும் இத்தனை சாமர்த்தியசாலி என்பதை அப்போதுதான் புரிந்து கொண்டார். சிறையிலிருந்து வெளியே வந்ததும் சொந்தப்பத்திரிகை 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/22&oldid=759587" இலிருந்து மீள்விக்கப்பட்டது