பக்கம்:என்னுரை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடங்கினால் திரு.சதாசிவத்தின் நிர்வாகத்தில் தான் அதை நடத்த வேண்டும் என்று அப்போதே முடிவு செய்தார். ---- கடல் போன்ற கல்கி கார்டன்ஸ் பங்களா ஒரு காலத்தில் விருந்தோம்பலுக்குப் பெயர் போன இடமாகத் திகழ்ந்தது. அநேகமாக வாரம் ஒரு பெரிய விருந்து அந்த வீட்டில் நடக்கத் தவறியதில்லை. திரு. சதாசிவம் அவர்களது அறுசுவை உண்டி பிரசித்தமானது. சிரித்த முகத்துடன் அவர் விருந்தினர்களை உபசரிக்கும் பாங்கும், நகைச்சுவை கலந்த பேச்சும் விருந்தினர்களை மகழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். ம.பொ.சி. ஒருமுறை சதாசிவம் வீட்டுக்குச் சாப்பிட அழைக்கப்பட்டிருந்தார். விருந்தின் இடையே முக்கிய ஐட்டமாகப் பால் பாயசம் வந்தது. "ஐயோ! என்னால் முடியாது. இனி வயிற்றில் இடமில்லை என்று உரிமையோடு மறுத்தார் ம.பொ.சி. திரு.சதாசிவம் சிரித்துக் கொண்டே ‘அப்படிச் சொல்லாதிர்கள். திருவனந்தபுரம் போயிருக்கிறீர்களா? அங்கே பத்மநாப ஸ்வாமி கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடக்கும். கோயிலைச் சுற்றிப் பெரும் கூட்டம் நிரம்பி வழியும். கூட்டத்தின் நெருக்கடியில் மூச்சுத் திணறும். மகாராஜா சுவாமி தரிசனத்துக்கு வருவார். அவர் வருகிறார் என்றதுமே கூட்டத்தின் இடையில் வழி கிடைத்துவிடும். இடைஞ்சலே இல்லாமல் சந்நிதிக்குப் போய்ச் சேர்ந்து விடுவார். இப்போது இந்தப் பால் பாயாசம் மகாராஜா மாதிரி, சாப்பிடுங்கள். தன்னால் 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/23&oldid=759588" இலிருந்து மீள்விக்கப்பட்டது