பக்கம்:என்னுரை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் கிடைத்துவிடும்' என்றார்! கல்கி தோட்டத்துக்கு வராத பிரமுகர்கள் யாருமே இல்லை என்று சொல்லலாம். ஆவடி காங்கிரஸின் போது வந்திருந்த நேருஜி அவர்கள் ஆவடி போகிற வழியில் காரை கல்கி பங்களாவுக்கு விடச் சொல்லி திருமதி எம்.எஸ்., திரு சதாசிவம் இருவரையும் வியக்க வைத்த செய்தி அனைவரும் அறித்ததுதான். "டைனமிஸம் என்ற சொல்லுக்கு அர்த்தம் சதாசிவம் என்று சொன்னால் அது மிகையாகது. எந்த ஒரு முயற்சியாக இருப்பினும் அதை ஒரு இயக்கமாகச் செய்து சாதனை புரியும் ஆற்றல் படைத்தவர். தம் எண்ணத்துக்கு இசைவாகச் சுற்றி இருப்பவர்களையும் இயங்கச் செய்யும் வல்லமை பெற்றவர். அவருக்குக் கோபம் வருவதையும் அடுத்த நிமிடமே அந்தக் கோபம் தணிந்து சாந்த புருஷராக மாறி விடுவதையும் கல்கி அலுவலகத்தில் நான் பணிபுரிந்த காலத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன். கொஞ்ச நேரம் முன்பு புயலாகச் சிறிய அவரா இப்போது இப்படி தென்றலாக வீசுகிறார் என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன். சற்றுமுன் எரிமலையாகக் கொநதளித்தவரா இப்போது இத்தனை குளுமையாக, பச்சை வாழப்பட்டையாக மாறி இருக்கிறார் என்று அதிசயித் திருக்கிறேன். 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/24&oldid=759589" இலிருந்து மீள்விக்கப்பட்டது