பக்கம்:என்னுரை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதாசிவம் என்கிற ரசனைக் கூட்டில் வாழ்ந்ததால்தான் திருமதி எம். எஸ். என்ற இசைக்குயில் தன் சங்கீத இறகுகளைப் புவியெங்கும் வீசிப் பறக்க முடிந்தது என்றால் அதை யாரும் மறுப்பதற்கில்லை. திருமதி எம்.எஸ்.ஸின் இசை நிகழ்ச்சிகள் மூலம் ஈட்டிய பெரும் செல்வத்தை நல்ல பல காரியங்களுக்கு வாரி வாரி வழங்கிய வள்ளல் கணவர் சதாசிவம். செய்வன திருத்தச் செய் என்ற கொள்கையுடைய திரு.சதாசிவம் தமது விசாலமான தோட்டத்தில் புறங்கை கட்டிக் கொண்டு உலாவுகிறார் என்றால் அச்சமயம் தான் கல்கி வளர்ச்சி பற்றியும் எம்.எஸ்ஸின் எதிர்காலம் பற்றியும் திவி ரமாகச் சிந்தித்து திட்டமிடுகிறார் என்று அர்த்தம். திருமதி.எம்.எஸ்ஸின் புகழ் இந்த அளவுக்கு உலகம் முழுவதும், ஆர்.ஆர்.சபையிலிருந்து ஐ.நா.சபை வரை பரவியிருக்கிறது என்றால் அதற்கு எம்.எஸ்ஸின் இசைப்புலமை மட்டும் காரணமல்ல; திரு.சதாசிவம் அவர்களின் அயராத உழைப்பும், அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளுமே முக்கியம். திருமதி எம்.எஸ்., திரு.சதாசிவம் இவர்கள் அடிக்கடி சென்றுவரும் திருத்தலங்கள் மூன்றுதான். காஞ்சி, திருப்பதி, புட்டபர்த்தி இம்மூன்றுமே அவை. காஞ்சிப் பெரியவர்களிடம், புட்டபர்த்தி பாபாவிடம் திருப்பதி தெய்வத்திடம் அவர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த பக்தி கொஞ்ச நஞ்சமன்று. இந்த மூன்று தெய்வங்களின் 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/25&oldid=759590" இலிருந்து மீள்விக்கப்பட்டது