பக்கம்:என்னுரை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நாயர்ஸான் முதன் முறை நான் ஜப்பான் போயிருந்தபோது நாயர்ஸான் பற்றி கேள்விப்பட்டு, அவரைப் பார்க்க விரும்பினேன். டோக்கியோ கின்ஸ்ாப்பகுதியில் நாயர் ரெஸ்டாரெண்ட் என்ற பெயரில் உணவுக்கூடம் ஒன்று உள்ளது. பகல் உணவுக்காக ஒருநாள் அங்கே போயிருந்தபோது, நாயர் ஸான் என்னைப் பார்த்துவிட்டு 'தமிழ்நாடா? என்று அன்புடன் விசாரித்தார். சுடச்சுட உணவு தந்து உபசரித்தார். இரண்டொரு தினங்களில் எங்களுக்குள் ஒரு சகோதர பாசம் ஏற்பட்டு ராமனும் குகனுமாகிவிட்டோம், பணம் கொடுக்கப் போனபோது, "நோ நோ! முதல்முதலாக என் உணவகத்தில் சாப்பிடுகிறீர்கள். உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆகவே, நான் பணம் வாங்க மாட்டேன். அடுத்தமுறை வரும்போது வாங்கிக் கொள்கிறேன்" என்று சகோதர பாசத்தோடு சொல்லி அனுப்பிவிட்டார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து நான் மறுபடியும் ஜப்பான் போனபோது அவரை மீண்டும் சந்தித்தேன். அப்போது அவர் தமது அரசியல் வாழ்வின் சுயசரிதையை எழுதி முடிக்கும் தறுவாயில் இருந்தார். டில்லியில் புகழ்பெற்ற புத்தக நிறுவனம் ஒன்று அதை வெளியிட ஒப்பந்தம் செய்திருந்தது. ஆங்கிலத்தில் வெளிவருவது போலவே இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் தம் சுயசரிதை வெளிவர வேண்டும் என்ற தமது 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/28&oldid=759593" இலிருந்து மீள்விக்கப்பட்டது