பக்கம்:என்னுரை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருப்பத்தை என்னிடம் வெளியிட்டார். ஆனால் அதற்கான திட்டம் ஏதும் அப்போது அவரிடம் இல்லை. நான் சென்னை திரும்பிய சில மாதங்களுக்குப் பின் நாயர்ஸானே இங்கு வந்து சோழா ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது என்னை அழைத்து, "என் சுயசரிதையைத் தமிழில் நீங்கள் கொண்டுவர வேண்டும். செய்து தருவீர்களா?" என்று கேட்டார். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். அப்படியே செய்தும் தந்தேன். புத்தகம் அச்சிடுவதற்கான செலவு முழுதும் அவரே ஏற்றுக்கொண்டார். எனினும் அதற்கான வரவு செலவுக்கணக்கை துல்லியமாக எழுதி அவரிடம் ஒப்படைத்தேன். என் மீதும், என் நேர்மை மீதும் அவருக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது பின்னொரு சமயம் வெளிப்பட்டது. பத்திரிகை நடத்துவதில் பல ஏற்றத்தாழ்வுகளை நான் சந்தித்ததுண்டு. பொருளாதார நெருக்கடி என்னை முற்றுகையிட்ட ஒரு காலகட்டத்தில் நான் ஜப்பானில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிவப்புக் கம்பளம் விரிக்காத குறையாக என்னை வரவேற்று உபசரித்தார். நான் சற்று கவலையோடு இருப்பதைப் பார்த்து விட்டு, என்ன விஷயம்? என்று கேட்டார். “ஒன்றுமில்லை, ஒரு லட்சம் ரூபாய் பனம் கிடைத்தால் எனது பிஸினஸில் ஒரு இக்கட்டான 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/29&oldid=759594" இலிருந்து மீள்விக்கப்பட்டது