பக்கம்:என்னுரை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டத்தைத் தாண்டிவிட முடியும்" என்றேன். அதன் பொருள் அவருக்குப் புரிந்தது. "சரி.... நான் பணம் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. வட்டி வாங்க மாட்டேன். உங்களால் எப்படித் திருப்பித் தர முடியுமோ, எப்போது முடியுமோ, அந்த வகையில் திருப்பித் தாருங்கள். உங்கள் பாங்க் அக்கெளண்ட் நம்பரைக் கொடுங்கள். திருவனந்தபுரம் 'பாங்க் ஆஃப் இந்தியாவில் எனக்கு கணக்கு இருக்கிறது. அங்கிருந்து டிரான்ஸ்ஃபர் செய்யச் சொல்கிறேன்" என்றார். - நெகிழ்ந்து போனேன். நான் சென்னை திரும்பி வந்து சேருவதற்குள் எனக்கு முன்பாக என் பாங்க் அக்கெள ண் டில் ஒரு லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது. மாதாமாதம், தவறாமல் பத்தாயிரம் ரூபாய்க்கு டிராஃப்ட் எடுத்து அந்த பாங்குக்கே அனுப்பி, பத்தே மாதங்களில் கடனை அடைத்து விட்டேன். பத்திரிகையில் நஷ்டம் வருவதற்குக் கேட்கவா வேண்டும்! அடுத்தமுறை இன்னொரு பெரிய நெருக்கடி வந்தபோது இரண்டு லட்சம் வேண்டும் என்று கேட்டேன். அப்போதும் ஜப்பானுக்குப் போயிருந்தேன். மறுநாள். நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு என்னைப் பார்க்க வந்த நாயர்ஸான் இரண்டு லட்சம் யென் நோட்டுகளைக் கற்றையாகக் கட்டிக் கொண்டு வந்து என்னிடம் நீட்டினார். 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/30&oldid=759596" இலிருந்து மீள்விக்கப்பட்டது