பக்கம்:என்னுரை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"நான் இரண்டு லட்சம் ரூபாய் அல்லவா கேட்டேன்! நீங்கள் கொண்டுவந்திருப்பது இரண்டு லட்சம் யென்கள் அல்லவா?" என்று விளக்கியபோது, "ஒ... அப்படியா? நான் சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஸாரி... நாளைக்கே உங்கள் அக்கெளண்ட்டுக்கு திருவனந்தபுரம் பாங்க் மூலம் டிரான்ஸ்பர் செய்து விடுகிறேன். நீங்கள் கவலையில்லாமல் போய் வாருங்கள்" என்றார். சொன்னபடியே பணமும் அனுப்பி வைத்துவிட்டார். அந்த முறையும் நான் நேர்மையாக அந்தக் கடனைத் திருப்பிக் கொடுத்து விட்டேன். நான் ஒவ்வொரு மாதமும் அனுப்பி வைத்த டிமாண்ட் ட்ராப்ட்களின் ஜெராக்ஸ் காப்பியை இன்னும் வைத்திருக்கிறேன். இவ்வளவையும் நான் சொல்லக் காரணம் உண்டு. லட்ச ரூபாய் என்பது அந்தக்காலத்தில் சாதாரண விஷயம் அல்ல. நானும், நாயர்ஸானும் ஏதோ காலா காலமாகத் தோளில் கைபோட்டுப் பழகியவர்களும் அல்ல. ஆனால் நான் பணம் கேட்ட மறுநொடியே வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் - ஒரு பத்திரம் கையெழுத்து எதுவும் இல்லாமல் - சரி என்று அவரைச் சொல்ல வைத்தது எது? "இந்த மனிதனிடம் நேர்மை இருக்கிறது. கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றுவான்" என்று அவருள் தோன்றிய நம்பிக்கைதான் காரணமாயிருக்க 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/31&oldid=759597" இலிருந்து மீள்விக்கப்பட்டது