பக்கம்:என்னுரை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தினமணிகதிர் ஆசிரியர் தினமணி கதிர் ஆசிரியராக நான் இருந்தபோது எனக்குப் பல சோதனைகள். ஆனாலும் நான் மிகுந்த பொறுமை காட்டி அந்தச் சோதனைகளுக்கெல்லாம் ஈடு கொடுத்து இறுதியில் வெற்றி கண்டேன். கதிரில் என்னை ஆசிரியராக அமர்த்திவிட்டுப் பல ஆண்டுகள் வரை அதைப் பத்திரிகையில் அறிவிக்காமலே இருந்தார்கள். பலமுறை இதுபற்றி பி.டி.கோயங்காவிடம் கேட்டும் சரியான பதில் இல்லாமல் சாக்கு ப் போக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். என் கோபத்தை வெளிக்காட்டாமல் பொறுமையாக இருந்தே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்பினேன். நான் ஆசிரியர் பொறுப்பேற்றபின் கதிரின் சர்க்குலேஷன் பெருமளவு உயர்ந்தது என்பது ஊரறிந்த உண்மை. அப்படியிருந்தும் நிர்வாகம் என் பெயரை ஆசிரியர் என்று அறிவித்து வெளிப்படையாக அங்கிகரிக்க ஏனோ முன்வரவில்லை. தானாகவே கனிந்து வரட்டும் என்று நான் நீண்டகாலம் காத்திருந்தது வீண் போகவில்லை. ஒருநாள் நான் சற்றும் எதிர்பாராதபோது நிர்வாகமே என் பெயரை ஆசிரியர் என்று 'இம்ப்ரிண்ட்'டில் போட்டு என்னை வியக்க வைத்தது. திரு. பி.டி.கோயங்கா என்னை அழைத்து "ஏம்பா, இம்ப்ரிண்ட்டில் உன் பேர் போட்டாச்சு. உனக்கு இப்ப திருப்திதானே?" என்று கேட்டார். நான் கொஞ்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/34&oldid=759600" இலிருந்து மீள்விக்கப்பட்டது