பக்கம்:என்னுரை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுத்தலாகவே தலையை மட்டும் அசைத்து விட்டு வந்தேன். சில வாரங்களுக்குப் பிறகு திரு. பி.டி.கோயங்கா என்னைக் கூப்பிட்டனுப்பினார். 'நீ தினமணியை எடுத்து நடத்தணும். நாளையிலி ருந்து நீதான் எடிட்டர் என்ற அளவுக்குப் பேச ஆரம்பித்தார். 'நமக்குத் தெரியாத விஷயத்தில் அல்லது துறையில் நாம் மூக்கை நீட்டக்கூடாது என்று நான் எனக்குள் ஒரு சங்கல்பமே செய்து கொண்டிருந்தேன். எனவே "என்னால் முடியாது” என்று ஒரே வார்த்தையில் பதில் கூறிவிட்டேன். ஆனால், பகவன்தாஸ் கோயங்கா என்னை விடுவதாக இல்லை. நாள்தோறும் நச்சரித்துக் கொண்டே இருந்தார். நானும் பி டிகொடுத்துப் பேசவில்லை. ஒருநாள் நான் என் உறவினர் வீ ட்டுக்குப் போயிருந்தபோது அங்கே போன் செய்து "என்னப்பா! நான் சொன்னேனே, என்ன முடிவு செய்தாய்?" என்று கேட்டார். நான் என் நிலைமையை விளக்கினேன். "நான் முழுக்க முழுக்க வாரப்பத்திரிகையாளன். தினசரிப் பத்திரிகை எனக்குச் சரிப்பட்டு வராது. எனக்கு அந்த வேலையும் தெரியாது. டெய்லி நடத்துவது தவில் வாசிப்பது மாதிரி. வீக்லியோ மிருதங்கம் வாசிப்பது மாதிரி. இரண்டுமே வாத்தியம் 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/35&oldid=759601" இலிருந்து மீள்விக்கப்பட்டது