பக்கம்:என்னுரை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் என்றாலும் தவில்காரர் மிருதங்கம் வாசிப்பதோ, மிருதங்கக்காரர் தவில் வாசிப்பதோ இரண்டிலுமே தேர்ச்சி பெற்றிருந்தால் தவிர சாத்தியமல்ல. நான் மிருதங்கம் வாசிப்பவன். எனக்கு தவில் வாத்தியத்தில் பயிற்சி கிடையாது. ஆகவே தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்” என்றேன். எவ்வளவு சொல்லியும் அவர் கேட்பதாயில்லை. சரி என்று அப்போதைக்கு என்னிடம் சொல்லிவிட்டு ஒரு வாரம் சென்றபின் மறுபடியும் பழைய பல்லவியை ஆரம்பித்துவிட்டார். நான் நழுவிக் கொண்டே இருந்தேன். சில ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். முதலமைச்சரானார். தினமணி கதிர் அட்டையில் எம். ஜி. ஆர். படம் போட வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். நான் முடியாது என்று மறுத்து விட்டேன். அடுத்த சில மாதங்களுக்குள் நான் வெளிநாடு போயிருந்தபோது என் சிட்டு கிழிக்கப்பட்டது. கலைஞர் அவர்களுக்கு இந்தச் செய்தி எட்டியதுதான் தாமதம், நான் அமெரிக்காவிலிருந்து திரும்பிய அன்றே, அக்கணமே என்னை டெலிபோனில் கூப்பிட்டு "எல்லாம் கேள்விப்பட்டேன். குங்குமம் என்ற பெயரில் ஒரு வார இதழ் தொடங்கி உங்களை அதற்கு ஆசிரியராக்கப் போகிறேன். வந்து சேருங்கள்” என்று அன்போடும், பாசத்தோடும், உரிமையோடும் சொன்னார். நான் மறு பேச்சின்றி மகிழ்ச்சியோடு 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/36&oldid=759602" இலிருந்து மீள்விக்கப்பட்டது