பக்கம்:என்னுரை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புக்கொண்டேன். காரணம், அது வாரப் பத்திரிகை என்பதால்தான். இப்போதும் சொல்கிறேன். கலைஞர் என் ஆருயிர் நண்பர்தான் என்றாலும், நான் கதிரிலிருந்து வெளியே வந்த சமயம் அவர் வாரப்பத்திரிகை ஆரம்பிக்காமல் தினசரி ஒன்றைத் தொடங்கி என்னை ஆசிரியராக இருக்கச் சொல்லியிருந்தால், அவரிடமும் முடியாது என்றுதான் சொல்லியிருப்பேன். பத்திரிகைத் தொழிலைப் பொறுத்தவரை நான் இன்னும் ஒர் இளைஞன் தான். ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாக இத்தொழிலைச் செய்து வருகிறேன். இதுவரை உற்சாகம் குன்றியதில்லை. புதிய புதிய உத்திகளைக் கையாண்டு புதுமைகள் பல செய்ய வேண்டும் என்ற அடங்காத ஆர்வம் என் ரத்தத்தில் ஊறிக்கிடக்கிறது. நண்பர்கள் என்னை ஒரு கேள்வி கேட்கிறார்கள். "இவ்வளவு நாள் எழுத்துத்துறையில் இருக்கிறீர்கள். சினிமாத் துறையில் இன்னும் ஏ ன் கால் பதிக்கவில்லை?" ஒரே பதில்தான். அது எனக்குத் தெரியாத துறை'. 32.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/37&oldid=759603" இலிருந்து மீள்விக்கப்பட்டது