பக்கம்:என்னுரை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. ராஜாஜி முதல் முதல் நான் சிங்கப்பூர் போயிருந்த போது மலேசியாவிலிருந்து நண்பர் திரு. அலி அங்கே வந்திருந்தார். ஒரு நாள் மாலை ஆறுமணிக்கு, "சிங்கப்பூரைச் சுற்றிப் பார்க்கலாம் வாங்க" என்று என்னை அழைத்துக் கொண்டு வீதிகளில் நடக்க ஆரம்பித்தார். ஒரு சாக்லெட்டை எடுத்து என்னிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னார். நான் அதன் மேல் சுற்றப்பட்டிருந்த காகிதத்தை உரித்து, தெருவில் வீ சாமல் பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன். இதை அதிசயமாகப் ಶ என் நண்பர் அலி, "ஆச்சரியமாயிருக்கிறதே! இந்தியாவிலிருந்து இங்கே வருபவர்கள் குப்பையைக் கிழே போடுவதைத்தான் பார்த்திருக்கிறேன். உங்களுக்கு மட்டும் இந்தப் பழக்கம் எப்படி வந்தது?" என்று கேட்டார் 'கல்கி அலுவலகத்துக்கு ராஜாஜி அடிக்கடி வருவதுண்டு. ராஜாஜிக்குச் சாத்துக்குடி பழம் பிடிக்கும். பழத்தைத் தாமே தான் உரித்துச் சாப்பிடுவார். சில நாட்களில் திருமதி எம்.எஸ். வீட்டில் அவருக்குச் சாத்துக்குடி கொடுப்பார்கள். ராஜாஜி அதை உரித்துச் சாப்பிடும்போது நான் கவனித்திருக்கிறேன். ஒரு சின்ன செத்தையோ, குப்பையோ கிழே விழாது. அதை அவர் உரித்துச் சாப்பிடுவதே ஒரு தனிக் கலை! முதலில் பழத்தின் மேல் தோலைப் பக்குவமாக நகத்தால் நடுப்பாதியில் வட்டமாகக் கிறி, இரண்டு கிண்ணங்களாகச் செய்து கொள்வார். பிறகு, 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/39&oldid=759605" இலிருந்து மீள்விக்கப்பட்டது