பக்கம்:என்னுரை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவ்வொரு சுளையாக எடுத்து அதன் மீதுள்ள வெள்ளைத் தோல்களை அகற்றி, நார் நரம்புகளை நீக்கி, விதைகளை விலக்கிய பின் முத்துமுத்தான சுளைகளை மட்டும் சாப்பிடுவார். பிறகு அந்த நார், விதை எதையும் கீழே எறிய மாட்டார். அத்தனை குப்பைகளையும் அந்தப் பழத்தின் மூடி போன்ற கிண்ணங்களிலேயே அடைத்து நிரப்பிவிடுவார்! அப்புறம் அந்த இரண்டு கிண்ணங்களையும் ஒன்று சேர்த்து பழையபடியே பந்துபோலச் செய்து கொண்டு, தம் வேட்டியிலிருந்து ஒரு நூலை உருவி அந்த நூலால் அந்தப் பந்தைச் சுற்றிக் கட்டி, தம் ஜிப்பா பாக்கெட்டில் போட்டுக்கொள்வார். காரில் வீ ட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது வழியில் கண்ணில் படும் குப்பைத்தொட்டியில் போட்டுவிடச் சொல்வார். அதுமட்டுமல்ல; அந்த டிரைவர் குப்பைத்தொட்டியில் போடுகிறாரா என்பதைக் காரில் இருந்தபடியே கண்காணிப்பார். இப்படி எந்தக் காரியம் செய்தாலும் அதைக் கச்சிதமாகச் செய்தால்தான் அவருக்குத் திருப்தி ஏற்படும். அந்தக் காலத்தில் ராஜாஜியை அருகிலிருந்து கூர்ந்து கவனித்து வந்த நான் ராஜாஜியைப் போல் எதையும் துல்லியமாகச் செய்யவேண்டுமென்று ஆசைப்படுவேன். ராஜாஜி அளவுக்கு Perfection இருக்காது என்றாலும் ஒரளவுக்காவது இருக்கும் என்று கருதுகிறேன். 36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/40&oldid=759607" இலிருந்து மீள்விக்கப்பட்டது