பக்கம்:என்னுரை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கர்நாடக இசை கிர்நாடக இசையின் மீது எனக்குள்ள ஆர்வமும், ஈடுபாடும் கொஞ்ச நஞ்சமல்ல. சிறு பிராயத்திலேயே எங்கே கச்சேரி நடந்தாலும் அங்கெல்லாம் ஓடிப்போய் உட்கார்ந்து கொள்வேன்: அதாவது டிக்கெட் இல்லாத கச்சேரிகளில் மட்டும்! என்னால் மறக்கவே முடியாத கச்சேரி ஒன்று உண்டு. சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் நடந்த திருமணக் கச்சேரி அது. வருடம் நினைவில் இல்லை. சித்துர் சுப்பிரமணியப் பிள்ளை - வாய்ப்பாட்டு, கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை - வயலின், புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை - கஞ்சிரா என்று எல்லாம் பிள்ளைமார்களாகவே அன்று குழுமியிருந்தார்கள். மிருதங்கம் மட்டும் பாலக்காடு மணி ஐயர். அன்று பழனி சுப்பிரமணியப் பிள்ளைதான் மிருதங்கம் வாசித்திருக்க வேண்டும். ஆனால் வாசிக்கவில்லை. காரணம் அன்று நடந்தது அவருடைய திருமணமாதலால் மணமேடையில் உட்கார வேண்டிய மாப்பிள்ளையே கச்சேரி மேடையில் உட்கார விரும்பாததுதான். எனவே தனக்கு பதில் பாலக்காடு மணி ஐயரை வாசிக்கச் சொல்லியிருந்தார். கச்சேரியின் தரம் பற்றிச் சொல்லவா வேண்டும்! கணிரென்ற குரல், தேர்ந்த விரல்கள். எடுத்த 3 39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/42&oldid=759609" இலிருந்து மீள்விக்கப்பட்டது