பக்கம்:என்னுரை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடுப்பிலேயே களை கட்டிவிட்டது. சித்துர் சுப்பிரமணியப் பிள்ளை எப்போதும் லயத்துக்கு முக்கியத்துவம் தருபவர். ராஜமாணிக்கம் பிள்ளையோ தேனாய்ப் பொழிந்து தள்ளுபவர். மிருதங்கம், கஞ்சிரா பற்றிச் சொல்லத் Uమణ. ஒன்று சிம்மம் என்றால் இன்னொன்று புலி: மிருதங்கத்தில் இரண்டு பக்கம் இருப்பது தெரியும். வலது புறம் வாசிக்கப்படும் வட்டத்தை வலந்தரை என்றும், இடதுபுறத்தைத் தொப்பி என்றும் குறிப்பிடுவார்கள். கச்சேரி நல்ல 'டெம்ப்போ'வி ல் போய்க் கொண்டிருந்தபோது திடீரென்று மிருதங்கத்தின் தொப்பியில் தொய்வு நேர்ந்து பொத் பொத் என்று சத்தம் வந்தது. வேறு மிருதங்கத்தை மாற்றிக் கொள்ளவும் முடியாத இக்கட்டான நிலை. பாலக்காடு மணி தவித்துப் போனார். என்ன செய்வது என்று தெரியவில்லை. கச்சேரியோ கன கம்பீரமாக அனைவரையும் சொக்க வைத்துக் கொண்டிருந்தது. ரசிகர்கள் உற்சாகமாய்த் தாளம் போட்டு ரசித்துக் கொண்டிருந்தார்கள். இடையில் நிறுத்துவதோ, வேறு ஏதும் செய்வதோ இயலாதநிலை. திருஷ்டிப் பரிகாரமாகப் போய்வி கஞ்சிரா தட்சிணாமூர்த்திப் பிள்ளையின் மேதைத்தனம் இந்த இக்கட்டான தருணத்தில் மிக 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/43&oldid=759610" இலிருந்து மீள்விக்கப்பட்டது