பக்கம்:என்னுரை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதமாய் வெளிப்பட்டது. அவர் பாலக்காடு மணி ஐயரைப் பார்த்துச் சொன்னார் : "அப்பனே! நீ வலந்தரையைப் பார்த்துக்கொள். தொப்பியைப் பற்றிக் கவலைப்படாதே. அதை நான் கவனித்துக்கொள்கிறேன்". என்ன செய்தார் தெரியுமா? மிருதங்கத்தில் தொப்பி தரவேண்டிய ஒலியைத் தம் கஞ்சிராவிலேயே கொண்டு வந்து காட்டினார். அதாவது அவர் கஞ்சிராவையும் வாசித்துக் கொண்டு அதே சமயம் மிருதங்கத்தில் தொப்பி செயல்பட வேண்டிய கட்டத்தில், காலப்பிரமாணம் தவறாமல், அந்த ஒலியையும் எழுப்பி பாலக்காடு மணி ஐயர்தான் தொப்பி வாசிக்கிறாரோ என்ற பிரமையை ஏற்படுத்தி ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை எழுப்பினார்! அந்தக் கால லயக்கலைஞர்கள் தங்கள் தொழிலில் அப்படி ஒரு அதிசயமான சாதனையைச் செய்து காட்டினார்கள். - இசைக்கலைஞர்களோ அசுரத்தனமாய்ச் சாதகம் செய்து தேவகானமாய்ப் பொழிந்து தள்ளினார்கள். எனக்குத் தெரிந்த இரண்டு ஜாம்பவான்களைப் பற்றிச் சொல்கிறேன். ஒருவர் ஜலதரங்கம் ரமணய்ய செட்டியார். இன்னொருவர் பர்லக்காடு மணி ஐயர். அந்த இரண்டு பேருடனும் நான் நெருங்கிப் பழகியிருக்கின்றேன். - - 4]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/44&oldid=759611" இலிருந்து மீள்விக்கப்பட்டது