பக்கம்:என்னுரை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரமணய்ய செட்டியார் இசையில் ஆழ்ந்த புலமை பெற்றவர். சுருதி சேர்க்கும்போது காதைத் திட்டிக்கொண்டு, மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வார். அகத்தியர் போன்ற உருவம். ஏழு கிண்ணங்களில் தண்ணிரை நிரப்பிக் கொண்டு அவர் சுருதி சேர்க்கும் விதமே அலாதி. ஸ்ரி கம பதநியில் எந்த ஸ்வரமானாலும் ஸ ஸ்வரமாக ஒலிக்க வேண்டும். தமக்கு திருப்தி ஏற்படும் வரை தண்ணிரை அந்தக் கிண்ணங்களில் கூட்டியும் குறைத்தும் மாற்றிக்கொண்டே இருப்பார். கனமான தண்ணிரா, லேசான தண்ணீரா என்று நுட்பமாக ஆராய்ந்து i Irrffilii HTfr அவர் எந்த அளவுக்கு நுணுக்கமாகச் செயல்படுவார் என்பதற்கு ஒர் உதாரணம் : ஏழு கிண்ணங்களையும் அர்த்த சந்திர வடிவில் வைத்துக் கொண்டு அவற்றில் ஜலத்தை நிரப்பித் தட்டித் தட்டி ஸ்வரங்களைப் பேச வைப்பார். 'ப' ஸ்வரம் சரியாக ஒலிக்கவில்லை என்றால் மிக மிகக் குறைவான அளவில் அந்தக் கிண்ணத்தில் தண்ணிர் விட்டுப் பார்ப்பார். அந்த அளவுக்கு விட்டால்தான் 'ப' பேசும். ஒரு ட்ராப் என்பார்களே. அப்படி. ஒரு இங்க் ஃபில்லரில் தண்ணிரை இழுத்து அதன் வழியாக ஒரு ட்ராப், ஒரே ஒரு ட்ராப் விட்டுத் தட்டினால் 'ப' பளிச்சென்று பேசும்! பாலக்காடு மணி அய்யரைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. - - 42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/45&oldid=759612" இலிருந்து மீள்விக்கப்பட்டது