பக்கம்:என்னுரை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயிலாப்பூர் எட்வர்ட் எலியட்ஸ் சாலையில் பிரபல தொழிலதிபர் ஒருவர் வீட்டுத் திருமணம். அன்று மாலை அரியக்குடி கச்சேரி. பாலக்காடு மணி அய்யர் மிருதங்கம். ஆனால் அன்று மணி அய்யர் சென்னையில் இல்லை. பம்பாயிலிருந்து வந்து சேர வேண்டும். மாலை ஐந்து மணி அளவில் விமானத்தில் வந்து மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஒட்டலில் தங்கினார். கச்சேரிக்கு எல்லோரும் வந்து கூடிவிட்டார்கள். அரியக்குடியும் வந்து மேடையில் அமர்ந்து விட்டார். வயலின், கடம் எல்லோரும் வந்தாயிற்று. மணி ஐயர் மட்டும் வரவில்லை. திருமண வீட்டார் அருகிலுள்ள ஒட்டலுக்குக் கார் அனுப்பி மணி ஐயரை அழைத்து வரச் சொன்னார்கள். "மன்னிக்கணும், நான் இப்போது வருவதற்கில்லை. ஆறரை மணிக்கு வருகிறேன்” என்றார் மணி அய்யர். "கச்சேரிக்கு எல்லோரும் வந்து காத்திருக்கிறார்கள்" என்று பரபரத்தார் அவரை அழைக்கப் போனவர். "தயவு செய்து என்னைப் புரிஞ்சுக்கணும். நான் இப்போதுதான் ப்ளேனில் வந்திருக்கிறேன். அந்தச் சப்தம் கும் என்று இன்னும் என் காதுகளை அடைத்துக் கொண்டிருக்கிறது. காதிலேயே தேங்கிக் கிடக்கும் சத்தத்தோடு போய் உட்கார்ந்தால் சரியாகச் சுருதி சேர்க்க முடியாது. பிளேன் ஸவுண்ட் காதிலி ருந்து கொஞ்சம் க்ளியர் ஆகட்டும். லேட்டானாலும் 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/46&oldid=759613" இலிருந்து மீள்விக்கப்பட்டது