பக்கம்:என்னுரை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஜி.டி. நாயுடு திரு.ஜி.டி. நாயுடுவுக்கு அப்பளம் என்றால் அலர்ஜி. அவர் ஒரு சமயம் கேரளா போயிருந்தபோது அங்கே ஒரு ஊரில் அப்பள மாவைக் கால்களால் மிதித்துக் கொண்டிருந்த காட்சியைப் பார்த்துப் பதறிப் போனார். "சி, அசிங்கம்! இனிமேல் அப்பளத்தைக் கையாலும் தொடமாட்டேன்" என்று விரதம் எடுத்துக் கொண்டார். நாயுடு அவர்கள் இந்த அநியாயத்தை ஒரு முறை தமிழ் அறிஞர் திரு.கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களிடம் சொல்லி முறையிட்டபோது, "அப்படியா! இன்றோடு நீங்க அந்த கேரளா அப்பளத்தை மறந்துடுங்க. இனி நான் உங்களுக்கு எங்கள் வீட்டில் அப்பளம் தயாரித்து அவ்வப்போது அனுப்பி வைக்கிறேன்” என்று சொன்னது மட்டுமல்லாமல், நாயுடுவின் கடைசி காலம் வரை அனுப்பிக் கொண்டும் இருந்தார். நாயுடுவின் மகன் ஜி.டி.கோபாலின் திருமணம் கோவை கோபால் பாக் பங்களாவில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த மங்கள நிகழ்ச்சிக்கு நான் போயிருந்தேன். 'இந்தக் கல்யாணத்தில் அப்பளமும், அசைவமும் கண்டிப்பாகப் பரிமாறக்கூடாது என்று நாயுடு தம் குடும்பத்தாரிடம் ஒர் உத்தரவுபோல் சொல்லி வைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். ஆனால் அதுபற்றி அவரிடம் நான் எதுவுமே கேட்கவில்லை. 47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/49&oldid=759616" இலிருந்து மீள்விக்கப்பட்டது