பக்கம்:என்னுரை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணத்தன்று காலையில் நான் நாயுடுவைப் பார்த்து வணக்கம் சொல்லிய போது அவர் வாங்க' என்று கைகூப்பியபடி, "இப்படியே என்னோடு கொஞ்சம் வரீங்களா? சமையற்கட்டுப் பக்கம் வரை போய்ப் பார்த்துட்டு வரலாம்" என்று அழைத்துச் சென்றார். நாயுடுவைக் கண்டதும் சமையலறையில் இருந்தவர்கள் பதறிப் போனார்கள். சமையற்கட்டில் இவரது கட்டளையை மீறிப் பொரித்து வைக்கப்பட்டிருந்த அப்பளக் கூடைகளையும், சமைக்கப்பட்டிருந்த அசைவ "அயிட்டங்களையும் சட்டென்று அவர்களால் மறைத்துவிட முடியவில்லை. நாயுடுவின் கூர்மையான கண்கள் அந்த அப்பளக் கூடைகளைக் கவனிக்கத் தவறவும் இல்லை. "பார்த்திங்களா! இப்படி எதையாவது இவங்க செய்வாங்கன்னு சந்தேகப்பட்டுதான் இங்கே வந்தேன். அப்பளம், போடலைன்னா கல்யாணச்சாப்பாடு போட்டது மாதிரி இருக்காதுன்னு வீட்டில் உள்ளவங்க சொல்லியிருப்பாங்க. நான் நெனச்சது சரியாப் போச்சு" என்று கோபமாக அந்த அப்பளக் கூடைகளை 'தரதரவென்று குழாயடிக்கு நகர்த்திக் கொண்டு போனார். என்னவோ விபரீதம் நடக்கப் போகிறது என்று எல்லோரும் நடுங்கிப் போனார்கள். வேகமாக நடந்த நாயுடு குழாயடியில் போய் நின்றார். இழுத்து வந்த அப்பளக் கூடைகளை ஒவ்வொன்றாக குழாயின் அடியில் தள்ளி வைத்துத் 48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/50&oldid=759618" இலிருந்து மீள்விக்கப்பட்டது