பக்கம்:என்னுரை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்ணிரைத் திருப்பி விட்டார். அப்பளம் முழுதும் நனைந்து பாழாய்ப் போயிற்று! ஒரு வருடம் கழித்து மீண்டும் கோவை சென்றபோது நாயுடு அவர்களைப் பார்க்க கோபால்பாக்' போயிருந்தேன். வாழைப்பழம் தந்து உபசரித்தார். ஒரு பழத்தைச் சாப்பிட்டதும் 'இது என்ன பழம் சொல்லுங்க பார்ப்பம்” என்று ஒரு புதிர் போட்டார். 'ரஸ்தாளி' என்றேன். உடனே "நீங்க என்ன நார்த் ஆர்க்காடா?" என்று கேட்டார் நாயுடு. "கரெக்டாச் சொல்லிட்டீங்களே, எப்படி?” என்று வியந்தேன். நாயுடுவே அந்த சூட்சுமத்தை விளக்கினார் : “என் மகன் திருமணத்தன்று குழாயடியில் அப்பளத்தின் மீது தண்ணிரைத் திருப்பி விட்டேனே, ஞாபமிருக்கா? மறுநாள் அந்த அப்பளங்களைக் கொண்டு போய் என் தோட்டத்து வாழை மரங்கள் அருகே வைத்துக்கொண்டு துப்பாக்கிக் குண்டுகளால் வாழை மரங்களின் அடித்தண்டில் பெரிய பெரிய துளைகள் போட்டேன். அந்தத் துளைகளில், நனைந்து போன அப்பளங்களையும் அசைவப் பண்டங்களையும் திணித்து மூடி விட்டேன். அந்த வாழை மரங்கள் இப்போது பெரிதாகி குலை தள்ளி பழம் தருகின்றன. அந்தப் பழங்கள் 49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/51&oldid=759619" இலிருந்து மீள்விக்கப்பட்டது