பக்கம்:என்னுரை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்தியாசமாகவும் பெரிய பெரிய சைளிலும் உள்ளன. உங்களிடம் இப்போது தந்தது அந்தப் பழங்களில் ஒன்றுதான்" என்றார். வடஆர்க்காட்டில் ரஸ்தாளி ஜாதிதான் அதிகம். அந்த ருசிதான் எனக்குப் பழக்கம். நாயுடு கொடுத்த பழத்தின் சுவையும் கிட்டதட்ட ரஸ்தாளி போலவே இருந்ததால் ரஸ்தாளி என்றேன். 'வாழைப்பழம் சாப்பிடுகிறவர்களிடம் ஒரு சைக்காலஜி உண்டு. தங்கள் பிராந்தியங்களில் விளையும் பழங்களின் ருசிதான் அவர்களுக்குத் தெரியும். எந்த வகை வாழைப்பழமாயிருந்தாலும் அது அவர்களுக்குப் பழக்கமான பழத்தின் ருசி போலத்தான் தோன்றும். அதனால் அந்தப் பழ வகையின் பெயரைத்தான் சொல்வார்கள். இதிலிருந்து அவர்கள் எந்த மாவட்டம் என்பதை எளிதில் கண்டுபிடித்து விடுவேன்! " என்று கூறிச் சிரித்தார் நாயுடு. இதுபோலவே வருகிறவர்களுக்கெல்லாம் வாழைப் பழங்களைக் கொடுத்து, ஒவ்வொருவரின் அபிப்ராயத்தையும் தனித்தனியாகக் கேட்டு அவர் அவர்களின் சொந்த மாவட்டத்தைச் சொல்லி வியக்க வைத்துக் கொண்டிருந்தார் நாயுடு. இவரை விந்தை மனிதர் என்றும் தாவர விஞ்ஞானி என்றும் சொல்லலாம்தானே! 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/52&oldid=759620" இலிருந்து மீள்விக்கப்பட்டது