பக்கம்:என்னுரை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. லண்டனில் பெரியார் Tென்னால் மறக்க முடியாத என் நெருங்கிய நண்பர்களில் கோவை தொழிலதிபர் திரு.ஜி.டி.நாயுடு அவர்கள் குறிப்பிடத்தக்கவர். அவரைச் சந்திக்கும் போதெல்லாம் அவர் தம்முடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்ச்சிகளை என்னிடம் விவரிக்கத் தவறியதில்லை. ஒருசமயம், திரு. நாயுடு அவர்கள் லண்டன் போயிருந்தபோது அங்கே ஐந்து நட்சத்திர ஒட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். அப்போது பெரியார் அவர்கள் லண்டனுக்கு வந்திருப்பதாகவும், அதே ஒட்டலில் தங்கியிருப்பதாகவும் நாயுடுவின் காதுக்குச் செய்தி எட்டியது. நாயுடு மிகுந்தமகிழ்ச்சியோடு பெரியார் தங்கியிருந்த அறைக்குப் போன் செய்து "நீங்க லண்டனுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். எப்போது வந்திங்க? உங்களைப் பார்த்துப் பேச ஆவலாயிருக்கிறேன்" என்றார். 'நானும் இப்போதுதான் கேள்வி ப்பட்டேன். நீங்களும் இதே ஒட்டலில்தான் தங்கியிருப்பதாகச் சொன்னார்கள்” என்றார். "ஆமாம், நான் இப்போது கிழே டைனிங் ஹாலுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். தாங்கள் தயவு செய்து அங்கே வந்து விடமுடியுமா?" என்று கேட்டார் நாயுடு. “சரி” என்றார் பெரியார். 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/54&oldid=759622" இலிருந்து மீள்விக்கப்பட்டது