பக்கம்:என்னுரை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியார் வருவதற்கு முன்பே டைனிங் ஹாலுக்குப் போய்விட்ட நாயுடு பெரியாருக்கும் சேர்த்து உணவு ஐட்டங்களுக்கு ஆர்டர் செய்து விட்டுக் காத்திருந்தார். பெரியார் அங்கு வந்து சேர்ந்த ஒரு சில நிமிடங்களுக்குள்ளாகவே ஆர்டர் பண்ணிய அயிட்டங்களும் மேஜைக்கு வந்து விட்டன. "சாப்பிடுங்க ஐயா...” என்றார் நாயுடு. "நான் இப்போதுதான் சாப்பிட்டேன். சாப்பிட்டு விட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன்” என்றார் பெரியார். "இல்லை. நீங்கள் மறுக்கக்கூடாது. கொஞ்சமாவது சாப்பிடுங்கள்" என்று வற்புறுத்தினார் நாயுடு. "அதெல்லாம் முடியாது, நான் ஏற்கெனவே வயிறு முட்டச் சாப்பி ட்டுவி ட்டுத் திணறிக் கொண்டிருக்கிறேன். இனி என்னால் ஒரு துண்டு ரொட்டிகூடச் சாப்பிட முடியாது! தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்" என்றார் பெரியார். "நான் உங்களை விடப்போவதில்லை, உங்களுக்கும் சேர்த்து ஒரு செட் ஆர்டர் பண்ணியாச்சு. தாங்கள் சாப்பிடாவிட்டால் அவ்வளவும் வீணாகிவிடும்" என்றார் நாயுடு. பெரியார் தர்மசங்கடத்தில் தவித்தார். சற்று யோசித்துவிட்டு, "அப்படியா?. எவ்வளவு ரூபாய்க்கு ஆர்டர் பண்ணினிங்க?" என்று கேட்கவும், சுமார் 54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/55&oldid=759623" இலிருந்து மீள்விக்கப்பட்டது