பக்கம்:என்னுரை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னூறு ரூபாய்க்கு என்றார் நாயுடு. அந்தக் காலத்தில் முன்னுறு ரூபாய் என்பது பெரிய தொகை. "அப்படியா! அவ்வளவு பணமா!' என்று வியந்த பெரியார் சட்டென அத்தனை ஐட்டங்களையும் தனக்கு எதிரில் நகர்த்தி வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் சாப்பிட்டுத் திர்த்துவிட்டார்! இந்தச் சம்பவத்தை என்னிடம் விவரித்த நாயுடு அவர்கள் "இதிலிருந்து பெரியாரைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?" என்று கேட்டார். 'பெரியார் ரொம்ப சிக்கனக்காரர் என்பது உலகறிந்த உண்மையாயிற்றே! செலவு பண்ணாமல் இருப்பது மட்டுமல்ல சிக்கனம். உணவுப் பொருட்களை வீணடிக்காமல் இருப்பதும் ஒருவகை சிக்கனம்தான். 'ஏற்கனவே சாப்பிட்டுவிட்டு வந்திருந்த போதிலும், தான் சாப்பிடாமல் போனால் அத்தனை உணவும் வீணாகிவி டுமே என்ற பெரியாரின் சிக்கன உணர்வுதான் அவரது மனச்சாட்சியை உறுத்தியிருக்க வேண்டும்” என்றேன். S5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/56&oldid=759624" இலிருந்து மீள்விக்கப்பட்டது