பக்கம்:என்னுரை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. திருச்சியில் பெரியார் திருச்சியில் பெரியாரை பேட்டி காணச் சென்ற போது அவர் வாங்கய்யா! என்று வாய் நிறையச் சொல்லி வரவேற்ற பண்பு கண்டு மெய்சிலிர்த்துப் போனேன். பழுத்த பழம் போல மேனி. உடல் தளர்ந்து போன வயோதிகம். அழுத்தம் திருத்தமான அவருடைய பேச்சில் உணர்ச்சி கொப்பளித்தது. பேட்டி நடந்து கொண்டிருந்தபோது கரூரிலிருந்து கட்சித் தொண்டர்கள் சிலர் கும்பலாக ஐயாவைப் பார்க்க வந்திருந்தார்கள் - ‘எங்கிருந்து வந்திங்க?' என்று விசாரித்தார் பெரியார். அடுத்த புதன் கிழமை கரூரில் மீட்டிங். நீங்க வந்து பேசனும் ஐயா.' - ‘ஏழரை மணிக்கு வச்சுக்குங்க. வந்துடறேன் அவர்கள் மகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றார்கள். 'இந்த வயசில் மீட்டிங், அது, இதுன்னு இப்படி அலையlங்களே. முடியுதா? என்று கேட்டேன் நான். முடியதாவது! ஒரு நாளைக்கு இரண்டு மூணு கூட்டத்துல கூடப் பேசறதுதான். முதல் முதல் நான் மீட்டிங் பேச போனப்ப, எவ்வளவு உற்சாகமாய்ப் போனேனோ, அதே உற்சாகத்தோட இன்றைக்கும் Sé,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/57&oldid=759625" இலிருந்து மீள்விக்கப்பட்டது