பக்கம்:என்னுரை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதாசிவம் ஆகியோரைப் பற்றி ஒவ்வொரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்த வரிசையிலே என்னைப் பற்றியும் ஒரு இதழிலே சாவி எழுதத் தவறவில்லை. என்னை எந்த அளவிற்குப் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு அதிலே அவர் எழுதியிருக்கின்ற ஒரு பகுதியைப் படித்தால் தெரிந்து கொள்ள முடியும். திரு.சாவியைப் பார்த்து பல பேர் "எப்படி இந்த வயதிலே உங்களால் அயராமல் உழைக்க முடிகிறது" என்று கேட்டதற்கு அவர் கூறுகிறார் - "சிரமமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ஏற்றுக்கொண்ட பொறுப்பைச் செய்து முடிக்க வேண்டும், எப்படியும் செய்து முடிக்க வேண்டும் என்ற கடமை உணர்வோடு செய்து வருகிறேன்” என்று கூறியதோடு நிறுத்தாமல், "இது கலைஞர் அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம்” என்று முடித்து எனக்குப் பெருமையைச் சேர்த்திருக்கிறார். கர்நாடக இசையிலேயும் திரு.சாவி அவர்களுக்கு தனித்த ஆர்வமும் ஈடுபாடும் உண்டு என்பதை வெளிப்படுத்த, அந்தத் தலைப்பிலும் ஒர் அருமையான கட்டுரை திட்டி பழங்காலத்து சங்கீத வித்வான்களை நினைவூட்டியிருக்கின்றார். ராஜாஜி பற்றி எழுதும்போது, விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கான நில மானியம் கோரி தான் எழுதிய கடிதத்திற்கு முதலமைச்சராக இருந்த ராஜாஜி அவர்களே பதில் எழுதியிருப்பதைக் கண்டு, நிலம் வழங்கியிருப்பார் என்ற ஆவலோடு கடிதத்தைப் பிரித்துப் படித்ததாகவும், அதில் ராஜாஜி, "நிலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/6&oldid=759628" இலிருந்து மீள்விக்கப்பட்டது