பக்கம்:என்னுரை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. “குவிட் இண்டியா" வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து 'குவி ட் இண்டியா என்று குரல் கொடுத்த மகாத்மா காந்தியுடன் நேரு, படேல் போன்ற மூத்த தலைவர்களும் பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் அடியேனும் ஒருவன். காந்திஜி புனாவிலுள்ள ஆகாகான் அரண்மனையில் காவலில் வைக்கப்பட்டு, தேசமே கொந்தளித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் காந்திஜியின் பெயரில் ஒர் அறிக்கை வெளியாயிற்று. 'இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி காந்திஜியின் பெயரில் ஒரு துண்டுப் பிரசுரம் வெளியாகியிருந்தது. அது ஆட்சேபகரமான துண்டுப்பிரசுரம் என்பதால் மிக ரகசியமாக நண்பர்களுக்குள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. தண்டவாளத்தைப் பெயர்க்க வேண்டும், தபாலாபீசைக் கொளுத்த வேண்டும், தந்திக் கம்பிகளை வெட்ட வேண்டும் என்றெல்லாம் அந்தப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது நினைத்துப் பார்த்தால் அகிம்சா மூர்த்தியான காந்தி ஜி அப்படியெல்லாம் வன்முறையைத் துண்டிவி ட்டிருப்பாரா என்று சந்தேகம் எழக் கூடும். ஆனால் அன்றைக்கிருந்த கொந்தளிப்பான சூழ்நிலையில் அவரது பெயரால் வெளியான அந்த அறிக்கையைப் பலரும் முழுமையாக நம்பிவிட்டார்கள். 59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/60&oldid=759629" இலிருந்து மீள்விக்கப்பட்டது