பக்கம்:என்னுரை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுவும் என்னைப் போன்ற இளைஞர்கள் பலரை அந்த வாசகங்கள் வீறு கொள்ளச் செய்ததில் வியப்பில்லை. அறிக்கையைப் படித்ததும் என்னுள் ரத்தம் வேகமாகக் கொதித்தது. காந்திஜியே சொல்லிவிட்டார். அப்புறம் என்ன? உடனே செயலில் இறங்க வேண்டியதுதான் என்ற ஆவேசத்துடன் அவசரம் அவசரமாக வெளியே கிளம்பி விட்டேன். நேரே மண்ணடி போஸ்ட் ஆபீஸுக்குப் போய் வாசலில் இருந்த தபால் பெட்டிக்குள் திக்குச்சிகளைக் கொளுத்திப் போட்டேன். அவை புஸ்ஸென்று புகைந்து போயிற்றே தவிர எரியவில்லை. இதை யாரும் கவனிக்கவில்லை. என்னை யாரும் கைது செய்யவும் வரவில்லை. உள்ளூர இது எனக்கு ஏமாற்றத்தை அளித்ததால் வேறு வழியின்றி நானே செக்குமேடு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் செய்து என் வீரப்பிரதாபத்தைச் சொல்லி, "உடனே வந்து என்னைக் கைது செய்யுங்கள். நான் இங்கே போஸ்டாபீஸ் வாசலிலேயே காத்திருக்கிறேன்” என்றேன். அடுத்த சில நிமிடங்களுக்குள் போலீஸார் ஒரு வேனில் வந்து என்னைக் கைது செய்து கொண்டு போய் லாக்-அப்பி ல் வைத்தார்கள். கோர்ட் வி சாரணைக்குப் பின்னர் ஒன்பது மாதம் சிறைத்தண்டனை பெற்று பெல்லாரி அலிபுரம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். எட்டு 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/61&oldid=759630" இலிருந்து மீள்விக்கப்பட்டது