பக்கம்:என்னுரை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதங்களுக்குப்பி ன் ஆகஸ்டு தியாகி என்ற முத்திரையுடன் வெளியே வந்தேன். சுதந்திரம் பெற்ற பல ஆண்டுகளுக்குப்பி ன் விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு மானியமாக நிலம் வழங்கப்படும் என்று அரசாங்கம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. பிரபல காங்கிரஸ் தலைவர் திரு.பக்தவத்சலம் உட்பட பல பிரமுகர்கள் இந்த மானியத்துக்கு மனுச் செய்து பத்து ஏகர் நிலமும் பெற்றுக்கொண்டனர். ஏழைத் தொண்டனாகிய நானும் மனுப் போட்டேன். நீண்டகாலம் வரை நிலம் வரும் என்று காத்திருந்தேன். ஒரு நாள் என் பெயருக்கு ஒரு தபால் கார்டு வந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜி தம் கைப்பட எழுதியிருந்தார். நம் தியாகத்தைப் பாராட்டி நிலம் சாங் ஷன் பண்ணியிருப்பார் என்று ஆவலோடு கார்டைப் படித்தேன். கார்டில் அவர் எழுதியிருந்த வாசகம் வருமாறு : "அன்புள்ள சாவிக்கு, ஆசிர்வாதங்கள். தங்களுடைய விண்ணப்பம் பார்த்தேன். நிலம் கேட்டு உங்கள் தியாகத்தை விலை கூற வேண்டியது அவசியம்தானா?” என்று ஒரு கேள்வி கேட்டு கையெழுத்துப் போட்டிருந்தார். ராஜாஜியே இப்படி எழுதிவிட்ட பிறகு அந்த ಥಿNಯೆ 61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/62&oldid=759631" இலிருந்து மீள்விக்கப்பட்டது