பக்கம்:என்னுரை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹநுமான் சஞ்சிவி பர்வதத்தைக் கையிலேந்தி பறப்பதுபோல் வரையப்பட்ட ஒவியம்தான் அந்தப் பத்திரிகையின் சின்னம்! அதில் ஹநுமானின் வால் நீளமாகத் திட்டப்பட்டிருக்கும். அதே மாதிரி விகடன் பத்திரிகையின் அரசியல் நிருபரின் வாலும் நீளமாக இருக்கும். "இந்த இரண்டு சின்னங்களின் வால்களையும் ஒரு கத்தரிக்கோல் வெட்டுவதுபோல் படம் வரைந்து அதையே நம் புதிய பத்திரிகைக்குச் சின்னமாகப் போட்டு விடலாம். புதிய பத்திரிகைக்குக் கத்தரி விகடன்' என்று பெயர் சூட்டி, விளம்பரம் செய்து விடலாம். இதை ஆனந்த விகடன் அலுவலகத்தில் பார்ப்பார்கள். விகடனுக்குப் போட்டியாக இன்னொரு விகடனா? என்று யோசிப்பார்கள். போட்டி விகடன் வருவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். உடனே உம்மைக் கூப்பிட்டு வேலை தந்து விடுவார்கள். பாருங்களேன்" என்றார் தி.ஜ.ர. “உங்க ஐடியா கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது போலுள்ளது” என்றேன். "பாருங்களேன்" என்றார் தி.ஜ.ர. நம்பிக்கையோடு. நண்பரின் யோசனைப்படியே 'கத்தரி விகடன் வெளி வருகிறது என்று ஒவியர் ஜி.எச். ராவ் என்பவரைக் கொண்டு ஒரு டிஸைன் தயார் செய்தேன். ஹநுமான் பத்திரிகையிலேயே அந்த விளம்பரத்தைப் பெரிதாக வெளியிடச் செய்தார் தி.ஜ.ர. 66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/66&oldid=759635" இலிருந்து மீள்விக்கப்பட்டது