பக்கம்:என்னுரை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்படியே கதிர், நாடோடி இருவரையும் அழைத்து அவர்களின் ஆரம்ப சம்பளம் நாற்பது ரூபாய் என்பதை அவர்கள் மூலமாகவே உறுதிப்படுத்தினார். "என்ன? ஒப்புக் கொள்கிறாயா?" என்று என்னைப் பார்த்துக் கேட்டார். "நாளைக்கு வந்து செர்ல்கிறேன்" என்றேன். "முடிவு பண்ண வேண்டியது நீதானே? இப்பவே சொல்லேன். என்ன யோசனை?” என்று கேட்டார். நான் தயங்கினேன். "என்ன சமாசாரம் சொல்லு" என்றார் கல்கி. "வேலையில் சேர்ந்து கொள்கிறேன். ஆனால் சொந்தமா பத்திரிகை தொடங்கும் ஏற்பாட்டில் கொஞ்சம் பணம் செலவாயிட்டுது. பணம் கடன் வாங்கிச் செலவு செய்திருக்கிறேன். அந்தப் பணத்தைத் திருப்பித் தர வேண்டும்" என்றேன். எந்த மாதிரி கேள்விகள் வரும்? அவற்றுக்கு நான் எப்படியெல்லாம் பதில் சொல்ல வேண்டும், என்னென்ன சொல்ல வேண்டும் என்பதையெல்லாம் தி.ஜ.ர. எனக்கு ஏற்கனவே பாடம் நடத்தியிருந்தார். "உனக்குப் பணம் கொடுத்தது யார்?' என்று கேட்டார் கல்கி. '6T657 பெரிய மாமனார் புரசைவாக்கத்தில் இருக்கிறார். அவர்தான் பணம் போட்டிருக்கிறார்" என்றேன். - "அவர் பணத்தை எங்கே போட்டார்? குளத்திலா 68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/68&oldid=759637" இலிருந்து மீள்விக்கப்பட்டது