பக்கம்:என்னுரை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போட்டார்! 33 நான் மெளனமாக இருந்தேன். "எவ்வளவு பணம்?” ஆயிரம் ரூபாயாவது சொல்லியிருக்கலாம். என் தரித்திர புத்தி என்னை விட்டு எப்படிப் போகும்? "நூற்றிருபது ரூபாய்! " என்றேன். "சரி, போய் அக்கெளண்டன்ட் வாஞ்சிநாதய்யரிடம் வாங்கிக்கோ" என்று கூறி வாஞ்சிநாதய்யருக்கு ஒரு சிட்டு எழுதி என்னிடமே கொடுத்தனுப்பினார். பணத்தை வாங்கிக் கொண்டு நேரே பூக்கடை காவல் நிலையத்துக்கு அருகிலுள்ள கதர்க் கடைக்குப் போனேன். கதர் சில்க் வாங்கி அப்போதே ஜிப்பா தைத்துப் போட்டுக் கொண்டேன். மறுநாள் காலை ஆபீஸுக்குப் போனதும் கல்கி கூப்பிட்டனுப்பினார். என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, அர்த்தபுஷ்டியோடு ஒரு புன்னகை பூத்தார். “என்ன, நேத்து வாங்கிண்டு போன பணத்தில் ஜிப்பாவா! இதோ பார். நீ சில்க் ஜிப்பாவெல்லாம் போடக்கூடாது. கதர் வேட்டி, கதர்ச் சட்டைதான் போட்டுக்கொள்ளணும்" என்றார். அன்று கழற்றிப்போட்ட அந்த சில்க் ஜிப்பாவை நான் அப்புறம் தொடவே இல்லை. 69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/69&oldid=759638" இலிருந்து மீள்விக்கப்பட்டது