பக்கம்:என்னுரை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேட்டு உங்கள் தியாகத்தை விலை கூற வேண்டியது அவசியம் தானா?” என்று எழுதியிருப்பது, நம் நெஞ்சத்தைத் தொடுகின்றது. நவகாளியில் காந்தியடிகள் பாத யாத்திரை தொடங்கிய நேரத்தில் "கல்கி" இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சாவி அவர்கள் அங்கே சென்றது பற்றியும், உத்தமர் காந்தியைச் சந்தித்தது பற்றியும் உருக்கமாக எழுதியிருப்பதும் இந்நூலுக்குத் தனிச் சிறப்பாகும். - திரு.சாவி அவர்கள் தொடராக "குங்குமம் இதழிலே எழுதியபோதே ஒவ்வொரு கிழமையும் நான் படித்து ரசித்தவைதான் என்றாலும், ஒட்டுமொத்தமாக நூல் வடிவிலே காணும்போது படிப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் உரிய பல செய்திகளை அவர் தொகுத்துத் தந்திருப்பது போற்றுதற்குரியது. சாவி அவர்களின் எழுத்துக்கள் பல நூல்களாக வெளிவந்திருக்கின்றன. நவகாளி யாத்திரை, சிவகாமியின் செல்வன், வாஷிங்டனில் திருமணம் என்ற அரிய நூல்களின் வரிசையிலே இந்த "என்னுரை' என்ற நூலும் ஒன்றாக விளங்கிடும் என்பதில் சந்தேகமில்லை; அயராது தொடர வேண்டும் அவருடைய எழுத்துப்பணி என்று வாழ்த்துகிறேன். மு. கருணாநிதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/7&oldid=759639" இலிருந்து மீள்விக்கப்பட்டது