பக்கம்:என்னுரை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. காந்தி மகாத்மா கTந்தி மகாத்மா நவகாளியில் பாதயாத்திரை துவங்கியிருந்த நேரம். இந்து முஸ்லிம் கலவரம் காரணமாக நவகாளி முழுதும் பயங்கரப் படுகொலைகளும், பற்றி எரியும் வீடுகளும் பரவலாய்க் காட்சி தந்து கொண்டிருந்தன. அந்தப் பகைப்போரிலி ருந்து மக்களை மீட்கவும், அமைதி வழிக்குத் திருப்பவும் மகாத்மா மேற்கொண்ட அந்த யாத்திரையில் நானும் கலந்துகொண்டேன். நவகாளியின் பூகோள அமைப்பே சற்று வித்தியாசமானது. வயல் வரப்புகளின் வழியே நடந்து சென்றால், நடுவே ஒரு தோப்பு தென்படும் - அதற்கிடையே குட்டை போன்ற ஒரு நீர்த்தேக்கமும், அதைச் சுற்றிலும் இருபது முப்பது வீடுகளும் இருக்கும். கிட்டத்தட்ட ஒரு திவுபோல என்று வைத்துக் கொள்ளலாம். அந்த மாதிரி ஏழெட்டு திவுகள் கொண்டது ஒரு கிராமம். மரங்கள், குட்டைகள், வீடுகள் இப்படி அடுத்தடுத்து அமைந்துள்ள கிராமங்களைக் கொண்டதுதான் நவகாளி மாவட்டம். ஒரு தோப்பிலிருந்து இன்னொரு தோப்புக்கு நடந்து செல்லும்போது வழிநெடுகச் சிறிதும், பெரிதுமாய் வாய்க்கால்கள் குறுக்கிடும். காந்திஜியால் அந்த வாய்க்கால்களைத் தாண்டிச் செல்வது முடியாத காரியம் என்று கூடியிருந்தவர்கள் கருதியததால், மகாத்மா கடக்கவேண்டிய கால்வாய்களின் குறுக்கே 71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/71&oldid=759641" இலிருந்து மீள்விக்கப்பட்டது