பக்கம்:என்னுரை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலமான மூங்கில்களைப் போட்டு இணைத்து ஒரு தாற்காலிக பாலம் அமைத்துவிட்டார்கள். நான் கல்கி பத்திரிகையின் நிருபராகப் போயிருந்தேன். காந்திஜியைப் பார்த்துப் பேசுவது அவ்வளவு எளிதாகத் தோன்றவில்லை. அவருடைய மொழி பெயர்ப்பாளர் வங்காள யுனிவர்ஸிடி புரொபஸர் நிர்மல்குமார் போஸை அணுகி, கெஞ்சிக் கூத்தாடி பெரும் சாகஸ்த்தின் பேரில் பேட்டிக்கு அனுமதி பெற்றேன். ஒரு குடிலுக்குள் உறங்கிக்கொண்டிருந்த காந்திஜி அரை மணி நேரத்துக்கெல்லாம் எழுந்து உட்கார்ந்து கைராட்டையில் நூல் நுாற்கத் தொடங்கி விட்டார். ராஜாஜியின் பெயரைச் சொல்லி, கல்கியின் பெயரைச் சொன்னதும் காந்திஜி, "அப்படியா? ராஜாஜிக்குத் தெரிந்திருக்க வேண்டுமே! நான் இங்கே பத்திரிகை நிருபர்கள் யாருக்கும் இங்கே அனுமதியில்லை என்று நான் ஏற்கனவே சொல்லி யிருக்கிறேனே. உன்னை மட்டும் அனுமதிப்பது சரியாகாதே! " என்று சொல்லி மறுத்துவிட்டார். "ஒரே ஒரு நாள் மட்டும் தங்கிவிட்டுப் போய்விடுகிறேன்" என்று நான் கெஞ்சிக் கூத்தாடியதின் பேரில் மகாத்மா மனமிரங்கி "இவ்வளவு துாரம் வந்தவிட்டாய். சரி: இன்று ஒருநாள் மட்டும் அனுமதிக்கிறேன்” என்று அந்த ஒரே ஒரு நாள் என்ற சொல்லுக்கு அழுத்தம் கொடுத்துச் சொன்னார். அதன்பின் அவர் குழுவில் நானும் ஒருவனாய் ஒட்டிக் கொண்டேன். 72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/72&oldid=759642" இலிருந்து மீள்விக்கப்பட்டது