பக்கம்:என்னுரை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்க்கால் மீது வேயப்பட்ட மூங்கில் பாலங்கள் மகாத்மாவின் பயணத்துக்கு ஏற்றதாக இருந்தாலும் அதிலேயும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. கலவரக்காரர்கள் சிலர் வேண்டுமென்றே அந்தப் பாலங்களின் மீது போடப்பட்டிருந்த மூங்கில்களை உடைத்து, அப்படி உடைத்தது தெரியாதபடி அவற்றின் மீது தழைகளைப் போட்டு மூடி மறைத்திருந்தார்கள். இந்தச் செய்தி காந்திஜியின் காதுக்கு எட்டியது. அவ்வளவுதானே! -அப்படியானால் நான் அந்தப் பாலங்களின் மீது நடக்காமல் தாண்டியே போய் விடுகிறேன்' என்றவர் அதற்காக அருகே இருந்த அகலமான வாய்க்கால் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தினமும் அதைத் தாண்டித் தாண்டி பயிற்சி செய்து கொண்டிருந்தார். அந்தப் பயிற்சி தொடங்கிய அன்று காலையில்தான் நான் அந்த ஊருக்குப் போய்ச் சேர்ந்தேன். அது மட்டுமல்ல, சற்று நேரத்துக்கெல்லாம் இன்னொரு அதிசயமும் நடந்தது. திடீரென்று மாகாத்மாஜி முகாமிட்டிருந்த அந்த இடத்துக்கு நாலைந்து கார்களும், ஜீப்புகளும் வரிசையாக வந்து நின்றன. சுதந்திர இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த பண்டித நேருவும், வல்லபாய் படேலும், அவர்களோடு அரசு அதிகாரிகள் சிலரும் கும்பலாக வந்து இறங்கினார்கள். நேருவையும், படேலையும் سdست

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/73&oldid=759643" இலிருந்து மீள்விக்கப்பட்டது