பக்கம்:என்னுரை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டதும் மகாத்மாவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. மூவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கட்டித் தழுவி க் கொண்டார்கள். "பாபுஜி! எதற்காக இந்தக் கால்வாயைத் தாண்டிக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார் நேரு. விஷயத்தை விவரித்துச் சொன்னார் மகாத்மா. "ப்பூ... இவ்வளவுதானே...! இதற்காகவா இவ்வளவு பிரயாசை? பார்க்கிறீர்களா? இதோ, இதை நான் ஒரே தாண்டாகத் தாண்டிக் காட்டுகிறேன்! " என்று சவால் விடுவதுபோல் கேட்டார் பண்டிட்ஜி. "எங்கே பார்ப்போம்...!" என்றார் காந்திஜி. அவ்வளவுதான் நேருஜி கச்சத்தை இழுத்துக் கட்டிக் கொண்டார். கிரிக்கெட் போட்டியில் வேகப் பந்து வீச்சாளர் பந்து வீசுமுன்பாகப் பல அடிகள் பின்னுக்குப் போய், அங்கிருந்து ஓடிவந்து பந்து வீசுவாரே, அப்படி நேருஜி கால்வாயிலிருந்து பல அடிகள் பின்னோக்கிப் போய் அங்கிருந்து வேகமாக ஓடிவந்து, ஒரே எட்டில் கால்வாயைத் தாண்டிக் குதித்தார்! "அரேரே! அச்சா, அச்சா!" என்று அதிசயித்த காந்திஜி, அப்புறம் சொன்னதுதான் அவரது நகைச்சுவைக்கு உதாரணம். "பண்டிட்ஜி! நீங்கள் ரொம்ப சுலபமாகத் தாண்டிவிட்டீர்கள்! ஆனால் நான் ஒவ்வொரு 74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/74&oldid=759644" இலிருந்து மீள்விக்கப்பட்டது