பக்கம்:என்னுரை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்வாயைத் தாண்டும்போதும் உங்களைப்போல பின் னுக்கு நடந்துபோய், அங்கிருந்து ஓடிவந்து தாண்டிக் கொண்டிருக்க முடியாதே! " என்று பலத்த சிரிப்புக்கிடையே கூறினார். நாட்டுப் பிரிவினையின்போது ஐந்நூறு கோடி ரூபாய் பாகிஸ்தானுக்கு இந்தியா தரவேண்டும் என்று ஒப்பந்தமாகி இருந்தது. இதை உடனே கொடுப்பதா, வேண்டாமா? என்பதுதான் பிரச்னை. "கூடாது, கொடுத்தால் பாகிஸ்தான் அந்தப் பணத்தைக் கொண்டே யுத்த தளவாடங்களை விலைக்கு வாங்கி நம் தலைமீதே குண்டு போடும்” என்பது வல்லபாய் படேலின் வாதம். நேருஜியால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. "சரி, வாருங்கள். காந்திஜியைக் கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம்" என்று கூறி படேலையும் அழைத்துக்கொண்டு காந்திஜி தங்கியிருந்த பூரீராம்பூருக்கு வந்துசேர்ந்தார். ஆனால் காந்திஜியோ கொடுத்த வாக்கைக் காப்பாற்றியே திரவேண்டும். பணத்தை உடனே கொடுத்துவிடுங்கள் என்று தீர்மானமாகக் கூறி, அவர்களை அன்றே வழி அனுப்பி வைத்துவிட்டார். என் பெருமையெல்லாம், மகாத்மா காந்தியை ஒரு வித்தியாசமான சூழலில், மிக முக்கியமான சரித்திரம் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில்-அதுவும் நேருஜி, படேல் போன்ற மாபெரும் தலைவர்களை காந்திஜியுடன் சேர்த்துப் பார்க்கும் அபூர்வக் காட்சியைக் காண முடிந்ததே, அதுதான்! 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/75&oldid=759645" இலிருந்து மீள்விக்கப்பட்டது