பக்கம்:என்னுரை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. காமராஜ் Ll ல்வேறு தலைவர்கள் தங்களது பல்வேறு தனித்தன்மைகளால் στσότ σόο 6οτ வி யக்க வைத்திருக்கிறார்கள் என்றாலும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் எளிமை அவற்றில் தலையாய இடம் வகிக்கிறது. அவரிடம் எப்போதுமே எனக்கு ஆழ்ந்த அன்பும், மரியாதையும் உண்டு. பலமுறை நான் டெல்லிக்குப் பயணம் செய்தது அவருடன்தான். தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்ததும் அவருடன் தான். அந்தக் காலத்தில் அவரோடு நெருங்கிப் பழகிய காரணத்தால் அவருடைய எளிய வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். அவரது ஆடம்பரம் என்று எதையாவது சொல்லவேண்டும் என்றால் மூன்றுவேளை கதர்ச் சட்டை மாற்றுவதை மட்டுமே சொல்ல முடியும். சட்டை எப்போதும் பளிச்சென்று இருக்கவேண்டும். காரில் சுற்றுப் பயணம் போகும்போது ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் க்குச் சில்லறை நாணயங்களாக மடியில் கட்டிவைத்துக் கொள்வார். 'எதுக்கு இவ்வளவு சில்லறை உங்களுக்கு? என்று கேட்டால் போகிற வழியில் கார் நின்னுச்சினா, பிச்சை எடுக்கிறவங்க காரை சூழ்ந்துக்குவாங்க. காசு போட்டால் போயிடுவாங்க, அதுக்குத்தான் என்பார். கையில் கடிகாரம்கூடக் கட்டுவதில்லை. கேட்டால், 77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/77&oldid=759647" இலிருந்து மீள்விக்கப்பட்டது