பக்கம்:என்னுரை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘என்னைச் சுற்றித் தான் எப்பவும் யாராவது இருப்பாங்களே... டைம் கேட்டா சொல்லிட்டுப் போறாங்க... தனியா நான் வேற ஏன் கட்டிக்கணும்னேன்...' என்பார். ஒரு சமயம் நான் அவரிடம் ஒர் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். ஒரு தீபாவளி நெருக்கத்தில் அவருடன் டெல்லி போயிருந்த போது தமிழ்நாடு கெஸ்ட்ஹவுஸில் அவர் தங்கியிருந்த அறையிலேயே என்னை யும் தங்கவைத்தார். இரவு துரங்கப்போகும் முன் எனது 'வாஷிங்டனில் திருமணம் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார். அவர் அதை முடித்துவிட்டுத் தூங்கும்வரை என்னால் விழித்துக் கொண்டிருக்க முடியவில்லை. நான் தூங்கிப் போய்விட்டேன். வெகு நேரத்திற்குப் பின் அவர் என்னைத் தட்டி எழுப்பினார். ‘என்ன இப்படி குறட்டை விடlங்க... நானே குறட்டை விடுகிறவன்தான்... நீங்க என்னையும் மிஞ்சிட்டீங்க... உங்க குறட்டைச் சத்தம் என்னைத் தூங்கவிடாது போலிருக்கு. பக்கத்து ரூம்ல போய்ப் படுத்துக்குங்க என்று சொல்லி அனுப்பிவிட்டார். அந்த நேரத்திலும் மறக்காமல், 'கதையைப் படிச்சு முடிச்சுட்டேன். நல்லா இருக்கு என்று பாராட்டத் தவறவில்லை. ஏதோ குறட்டை விஷயத்திலாவது பெருந்தலைவர் காமராஜரை மிஞ்சமுடிகிறதே என்று எனக்குள் பெருமை! 78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/78&oldid=759648" இலிருந்து மீள்விக்கப்பட்டது