பக்கம்:என்னுரை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்போதும் பயணத்தின் போது அவருடன் ஒரு பெட்டி வரும். டில்லியில் நான் அவருடன் தங்கியிருந்த போது எனக்குள் உள்ளுர ஒரு குறுகுறுப்பு. அந்தப் பெட்டிக்குள் அப்படி என்னதான் இருக்கும்? என் நிருபர் புத்தி என்னைக் குடைந்து கொண்டிருந்தது! இவரோ பிரமச்சாரி. எளிய வாழ்க்கை. ஒருநாள் அந்தப் பெட்டியைத் திறந்து சோதனை போட்டுவிட வேண்டியது தான் என்று என் மனதுக்குள் திர்மானித்துக் கொண்டேன். ஒருநாள் அவர் காரியக் கமிட்டிக் கூட்டத்துக்குப் போயிந்தார். திரும்பி வர நேரமாகும் என்று தெரிந்தது. அந்த நேரத்தில், ஒரு இரும்புச் சட்டத்தின் உதவியுடன் அந்தப் பெட்டியின் பூட்டை உடைத்துத் திறந்து விட்டேன். உள்ளே, ஜான் கந்த்தர் எழுதிய இன்ஸைட் ஆஃப்ரிக்கா புத்தகம், திருக்குறள், காண்டேகர், கம்பராமாயணம், மூன்று கதர்ச் சட்டைகள், ஒரு சேவிங்ஸெட், இரண்டு வேட்டி, மேல் துண்டு நாலு. நான் இவற்றை ஆராய்ந்து கொண்டிருக்கையில் எதிர்பாராமல் காமராஜர் உள்ளே வந்து விட எனக்குத் துக்கிவாரிப் போட்டது. 79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/79&oldid=759649" இலிருந்து மீள்விக்கப்பட்டது