பக்கம்:என்னுரை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘என்ன... என்ன... என்ன... பாக்கறீங்க? அவர் வருவதற்குள் என் துப்பறியும் வேலையை முடித்துவிட வேண்டும் என்ற முயற்சியில் தோற்றுப் போய், கைகால் வெலவெலத்து, அவர் முன்னால் அசடு வழிந்து எதையோ உளறிக் கொட்டினேன். ஒரு கணத்தில் எல்லாம் புரிந்து விட்டது அவருக்கு. அடடே! கேட்டா நானே பெட்டியைத் திறந்து காட்டியிருப்பேனே! நல்ல பெட்டியைப் பாழாக்கிட்டீங்களே! ... (அது ஒன்றும் அப்படி நல்ல பெட்டியில்லை. பழசுதான்! ) 'இல்லை... பூட்டை சரிப்படுத்திடலாம் என்று நான் சொன்னதும், அவர் பூட்டையும் பெட்டியையும் அப்படி இப்படி அசைத்துப் பார்த்துவிட்டு 'ம்... சரியா வராது... கீழே தினதாயள் இருப்பார். அவர் கிட்ட சொல்லி சரி செய்யச் சொல்லுங்க! என்று கூறிவிட்டு, சற்று நேரத்துக்கெல்லாம் மீண்டும் வெளியே புறப்பட்டுப் போய்விட்டார். - பெருந்தலைவர் மரணச் செய்தி கிடைத்தவுடன் நான் ஒரு பூ மாலையுடன் திருமலைப்பிள்ளைத் தெருவுக்குப் பறந்தோடிப் போய், கண்ணிர் சிந்தியபடி அவருக்கு என் இறுதி அஞ்சலியைச் செலுத்திவிட்டுத் திரும்பினேன். செய்தி திவிரமாகப் பரவாததால் கூட்டம் சேரவில்லை. போலீஸ் உயர் அதிகாரி நண்பர் பரமகுருவும், காமராஜரின் உதவியாளர் வைரவனும் மட்டுமே கண்கலங்கி நின்று கொண்டிருந்தார்கள். 80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/80&oldid=759651" இலிருந்து மீள்விக்கப்பட்டது